India
உருவானது 'உம்ஃபன்' புயல்... அதிதீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று சூறாவளிப் புயலாக மாறியுள்ளது. உம்ஃபன் (Amphan) என்று இந்தப் புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையானது மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும் நாளை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கமானது வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் 65 லிருந்து 75 கிமீ இடை இடையே 85 கிமீ . சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 670 கிமீ தொலைவிலும்; புவனேஸ்வரிலிருந்து தெற்கே 1160 கிமீ ; கொல்கத்தாவிலிருந்து 1400 கிமீ தெற்கு தென் மேற்கு திசையில் உள்ளது. இது தற்போது வடக்கு வடமேற்கு திசையில் 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
Also Read
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!