India

“தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து” - புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை! #Corona

புதுச்சேரியில் திறக்கப்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

கொரோனா தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாகவே எந்தவித தொற்றும் இல்லாமல் உள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். 5 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்ற்னர். 3,915 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகள் தொற்று இல்லாத பகுதியாக உள்ளது. நேற்று 65 பேருக்கு தொற்று இருக்கின்றதா என்று சோதனை செய்ததில் 63 பேருக்கு தொற்று இல்லை எனத் வந்துள்ளது.

இனி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் செயல்படும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும். அவசர காலத்தில் சில மருத்துவமனைகள் செயல்படவில்லை என புகார் வருகிறது. உத்தரவை மதிக்காத மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

வீடு வீடாகச் சென்று மருத்துவ பணியாளர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை 8 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துளள்னர். அதனால் வரும் நாட்களில் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும், முகக் கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஊருக்கு மட்டும் உபதேசம்... ஊரடங்கை மீறிய எடப்பாடி பழனிசாமி” - காவல்துறையில் புகார்! #CoronaLockdown