India

“வீட்டில் இருப்பவர்களுக்கு டேட்டாவை அள்ளி வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்” : புதிய பிளான்கள் அறிமுகம்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நாடுமுழுவதும் மத்திய அரசு 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதனால் வீட்டில் இருந்தே அலுவலக வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். வீட்டில் உள்ள நாட்களை கழிப்பதற்காக மொபையல் போனையே பெரும்பாலனோர் நம்பியுள்ளனர். அதனால் வழக்கத்தை விட அதிக நேரம் மொபையலில் வீடியோ பார்ப்பது, சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது என தங்களின் நேரத்தை செலவு செய்கின்றனர்.

அதனால் தங்கள் மொபையல் டேட்ட சீக்கிரம் தீர்ந்து அடிக்கடி டேட்டாவுக்கு பணம் செலவு செய்யும்நிலைமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் பலர் சலுகை அளிக்கும் படி தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை பரிசிலனை செய்த முக்கிய தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஃவோடபோன் மற்றும் ஏர்டெல் 3 ஜிபி டேட்டா கொண்ட பிரத்யேக பிளான்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட பிளான் ஒன்றை ரூ.349க்கு அறிவித்துள்ளது. 38 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் இலவச கால் உள்ளிட்ட வழக்கமான அனைத்து இலவச திட்டங்களும் அடங்கும்.

அதனையடுத்து, வோடபோன் நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட பிளான்கள் ஒன்றை ரூ.349 ரூபாய்க்கு அறிவித்துள்ளது. அதன் வேலிடிட்டி 56 நாட்களாகும்.

மேலும், 599க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட மற்றொரு பிளானும் கொடுத்துள்ளனர். அதிலும் இலவச கால் உள்ளிட்ட வழக்கமான அனைத்து இலவச திட்டங்களும் அடங்கும்.

அதேப்போல், ஏர்டெல் சேவையில் ₹398க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும் . அதேபோல் ₹558க்கு ரீசார்ஜ் செய்தால் 56 வேலிடிட்டியில் கிடைக்கும்.

ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட பிளான்கள் இரண்டு விலையில் கிடைக்கிறது. ரூ.398க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும், ஆனால் 28 நாட்கள் வேலிடிட்டி. ரூ.558க்கு ரீசார்ஜ் செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டி உடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த பிளான்களை அறிவித்தாலும் பெரும்பாலன வாடிக்கையாளர்கள் இலவச டேட்டா அறிவித்திருக்கலாம் அல்லது விலையை இன்னும் குறைத்து அறிவித்திருக்கலாம் என கூறிவருகின்றன.

Also Read: தொலைத்தொடர்பு துறையிலும் எதிரொலித்த பொருளாதார சரிவு : வீழ்ச்சியை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அரசு!