India
“21 நாள் ஊரடங்கை புத்தகம் வாசித்துக் கழியுங்கள்...” - இலவசமாக புத்தகங்கள் வழங்கும் நேஷனல் புக் டிரஸ்ட்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக தவிர எவரும் வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் தங்கள் ஊரடங்கு ஓய்வுக்காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க, தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) தமிழ் உள்பட 18 மொழிகளில் தேர்ந்தெடுத்த சிறந்த புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலமான 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமான வழியில் செலவிட வேண்டும் என்கிற நோக்கிலும், குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் எனும் நோக்கிலும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தேசிய புத்தக அறக்கட்டளை வாயிலாக இலவசப் புத்தகப் பதிவிறக்கத்தை அனுமதித்துள்ளது.
அந்தகையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 18 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது தேசிய புத்தக அறக்கட்டளை.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், தமிழில் மிகக்குறைவான புத்தகங்களே இலவச பதிவிறக்க பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதை அறிமுகப்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
வாசிப்பதற்கான இணையதள முகவரி : https://www.nbtindia.gov.in/
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !