India
டாஸ்மாக்கை மூடாத அரசு: கொரோனா முன்னெச்சரிக்கை பணியில் மதுக்கடைகள்- குடிமகன்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி!
மதுபானக் கடைகளில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க புதிய வழிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவேண்டாம், முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும், அவ்வப்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மார்ச் 22ம் தேதி 'மக்கள்-ஊரடங்கு' என்ற முறையில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பிரதமர் மோடியும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், மதுபான பார்கள், ஹோட்டல்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வந்தாலும், அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதன்படி, குடிமகன்கள் இடைவெளி விட்டு நின்று வெயிலில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடையிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் மதுபானம் வாங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டு கோடு போடப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
Also Read
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !