India
2017-19ல் ரயிலில் 165 பலாத்காரங்கள்.. எங்கே போனது பெண்கள் பாதுகாப்பு? - RTI மூலம் அம்பலம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால், நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இப்படி இருக்கையில், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்த விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், ஓடும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் உள்ளிட்ட விவரங்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், கடந்த 2017-19 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், ஓடும் ரயில்களில் 136 பெண்களும், ரயில் நிலையங்களில் 29 பெண்களும் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019ம் ஆண்டில் 44ம், 2018ல், 70ம், 2017ல் 51 பலாத்கார சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதுபோக, கடந்த 3 ஆண்டுகளில் 1,672 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
ஓடும் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், 542 கொலைகள், 4,718 கொள்ளை, 213 கொலை முயற்சி, 771 ஆள் கடத்தல் ஆகியவரை நடந்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் பயணித்ததாக கடந்த 2018,2019ம் ஆண்டுகள் முறையே 1,39,422 மற்றும் 1,14,170 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!