India
#DelhiViolence : உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு : குவிக்கப்பட்ட போலிஸார் - கோகுல்புரியில் மீண்டும் வன்முறை!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க ஆதரவாளர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டனர்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து போராட்டங்களில் வன்முறை வெடித்தது. டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.
வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்டவற்றை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலிஸார் குவிக்கப்பட்டு, கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வன்முறை தணிந்துள்ளது.
கோகுல்புரியில் பழைய இரும்புக்கடைக்கு கும்பல் ஒன்று இன்று காலை தீ வைத்தது. இதையடுத்து அதை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டுப்படுத்தினர். இன்று காலை முதல் பெரும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெறாவிட்டாலும், பதற்றமான சூழலே நிலவுகிறது.
டெல்லி முஸ்தபாபாத் பகுதியில் நேற்று இரவில் ஒருவர் பலியானார். நேற்று அங்கு வீடுகளுக்கு தீவைத்ததால் பள்ளி ஒன்றில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் போலிஸாரால் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இராணுவத்தை வரவழைத்து நிலைமையை சரி செய்யவேண்டும் என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!