India
“மோடி ஆட்சியில் காலியான குடும்பங்களின் சேமிப்பு” : 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு துடைத்தெறியப்பட்ட அவலம்!
நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் மக்களுக்கு இருக்கும் சேமிப்பு பழக்கத்தின் மூலம் நெருக்கடிகளில் இருந்து எப்பாடுபட்டாவது மீண்டு வருவார்கள்.
ஆனால் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி அரசு தனது தவறான பொருளாதாரக் கொள்கையால் மக்களிடம் இருந்த சிறு சேமிப்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேமிப்புக்கான வட்டிவிகிதமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
அதனால் மேக்ரோ பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்களிடம் கடன் வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் குடும்பங்கள் வருமானத்தில் இருந்து சேமித்து வைக்கும் முறையும் அடியோடு குறைந்துள்ளது.
இந்தியாவின் சாமானிய குடும்பங்கள் தங்களின் வருவாயில் சுமார் 60 சதவிகிதத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும், ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜி.டி.பி-யில் மொத்த சேமிப்பின் அளவு கடந்த 2012ம் ஆண்டில் கூட 34.6 சதவிகிதமாக சேமிப்பு இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டில் இதன் அளவு 30.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல, இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவை எடுத்துக் கொண்டால், 2012-ம் ஆண்டு, இந்தியாவின் ஜிடிபி-யில் 23 சதவிகிதமாக இருந்த சேமிப்பு, 2019-இல் 18 சதவிகிதமாக குறைந்துள்ளது. மக்களின் சேமிப்பு குறைவதன் மூலம், மத்திய அரசு வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !