India
டெல்லியில் தேர்தல் நடைபெறும்போதே இஸ்லாமியர்களை மிரட்டும் பா.ஜ.க- ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவால் சர்ச்சை!
70 இடங்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இஸ்லாமிய பெண்கள் வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் நிற்கும் காட்சியைப் பகிர்ந்து, “Kaagaz Nahi Dikayenge Hum” என இந்தியில் “ஆவணங்களை காட்டமாட்டோம்” என இஸ்லாமியர்கள் கூறியதை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், “உங்களது இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை செயல்படுத்தப்படும்போது இதனை மீண்டும் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக பா.ஜ.க-வின் இத்தகைய ட்விட்டர் பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திவரும் வேளையில் இதுபோன்ற பதிவு போராட்டக்காரர்களை கொச்சைப்படும் நோக்கில் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
டெல்லியில் இன்னும் தேர்தல் முடிவடையாத நிலையில், கர்நாடக பா.ஜ.கவினரின் இந்த மதரீதியிலான ட்விட்டர் பதிவால், டெல்லி தேர்தலில் பா.ஜ.கவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!