India

“கடந்தாண்டு ஒதுக்கிய பணத்தையே மோடி அரசு முழுமையாக செலவழிக்கவில்ல” : பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் பேட்டி

நாடாளுமன்றத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பல மோசமான அம்சங்கள் இருப்பதாகவும், இது எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கப்போவதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது, “மத்திய அரசின் பட்ஜெட்டில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உரிய விலைக்கிடைக்காமல் விவசாயிகளின் வருமானம் 4 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கிறது. பா.ஜ.க அரசால் விவசாயிகளின் வருமானத்தை பெறுக்கமுடியாது. அதுமட்டுமின்றி இந்த ஆட்சியில் பொருளாதரா வளர்ச்சி குறைந்துள்ளது. அதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சியை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே அரசு பங்குகளை விற்பனை செய்யமுடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை அரசு முழுமையாக செலவழிக்கவில்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் திக்கு தெரியாமல் செல்கிறது” குற்றம் சாடினார்.

Also Read: தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” - ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!