India
“ஜனநாயக நாடு என்ற பெருமையை இழந்தது” : மோடி ஆட்சியில் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் பின்னடைவு!
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit - தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்) அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் ஜனநாயக குறியீடு என்ற பெயரில் ஆய்வு பட்டியலை வெளியிடும்.
இந்த குறியீட்டிற்கான ஆய்வு, தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சமூகத்தினரின் தனி உரிமைகள் ஆகிய ஐந்து சிறப்பம்சங்களின் அடிப்படையில் 165 நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டு பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக உரிமைகள் பின் தங்கியுள்ளதாகவும், அதிலும் இந்தியா 10 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2018-ல் இந்தியா 7.23 என்ற குறியீட்டில் இருந்தது. ஆனால் 2019-ல் 6.90 என்று பின்னடைவு கண்டுள்ளது. அதனால் ஜனநாயகக் குறியீட்டுக்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு வந்துள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.
ஜனநாயக பட்டியலில் இந்தச் சரிவு நாட்டில் சிவில் உரிமைகள் மோசமடைந்து வருவதால் ஏற்பட்டு உள்ளது. சிவில் உரிமை மோசமானதற்கு மோடி அரசு மேற்கொண்ட காஷ்மீர் விவகாரம் மிக முக்கிய காரணம். குறிப்பாக காஷ்மீரில் இணையதள முடக்கம், அரசியல் தலைவர்கள் வீட்டு சிறை உள்ளிட்டவற்றால் இந்தப் பின்னடைவில் தாக்கம் செலுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம், மோடி ஆட்சியில் உலகின் “மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா” என்ற பெருமையை இழந்துள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!