India
"மோடிக்கு எதிராக முழக்கமிட்டால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள்" : மாணவர்களை மிரட்டிய உ.பி. அமைச்சர்!
இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் போராட்டக்களத்தில் இறங்கி உரிமைக்காக போராடி வருகின்றனர்.
அதேசமயம் பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வந்தாலும் தொடர்ந்து அவர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர்.
அதுபோதாதென்று போராட்டக்காரர்களை மிரட்டும் வகையிலான செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தின் அமைச்சராக உள்ள ரகுராஜ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய ரகுராஜ் சிங், இன்று போல என்றும், பிரதமர் மோடியும், முதல்வர் யோகியும் ஆட்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலோ, பேசினாலோ உயிருடன் எரிக்கப்படுவீர்கள் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுவோர் பொடா சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்வார்கள் என அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரகுராஜ் சிங்.
மக்கள் நலனுக்காக ஆட்சியை நடத்துகிறோம் என்று பெருமையாக பொதுவெளியில் பேசிவிட்டு, அதே பொதுவெளியில் மக்களை சுட்டுத்தள்ளுவேன், சிறைக்கு அனுப்புவேன் என்று பேசுவது மக்களிடையே மேன்மேலும் அவர்களை எதிர்ப்பதற்கான காரணத்தை வலுவடையச் செய்து வருகிறது.
Also Read
-
மகளிர் தினம் : “தமிழ்நாட்டோட இலட்சிய கனவை நீங்கதான் நிறைவேற்ற போறீங்க..” - முதலமைச்சர் சொன்ன செய்தி!
-
சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்… இந்தியாவிற்கே வந்து மிரட்டிச் சென்ற அமெரிக்கா!
-
பெண்ணுரிமையை பறைசாற்றிய பாரதியாரைப் போற்றும் 'பாரதியார் இல்லம்' புதிய Instagram வலைதள பக்கம் தொடக்கம்!
-
நெல்லையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... என்னென்ன வசதிகள்? - விவரம்!
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!