இந்தியா

“போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகளை அழிப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்”- பா.ஜ.க தலைவர் சர்ச்சை பேச்சு!

போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகளை அழிப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்”- பா.ஜ.க தலைவர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், போராட்டக்காரர்கள் மீது மத்திய பா.ஜ.க அரசு வன்முறை தாக்குதல் நடத்தி மக்கள் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் போரட்டக்காரர்கள் ஏராளமானோர் படுகாயமுற்றாலும், தொடர்ந்து உரிமைக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

அதில், நாடியா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுக் கொல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தர பிரதேசம், அசாம், கர்நாடகாவில் இதுபோல செய்தவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அதேபோல மேற்கு வங்காளத்திலும் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாததற்கு கண்டனம் என தெரிவித்துள்ளார்.

திலீப் கோஷின் இந்தப் பேச்சு பா.ஜ.க சர்வாதிகாரத்தைக் கடைபிடிப்பதை வெளிப்படையாக அறிவிப்பதாக அமைந்துள்ளது. மேலும், திலீப் கோஷின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories