India
2019-20 முதல் பாதியில் நடந்த வங்கி முறைகேடுகள் : ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்
நாட்டின் நிதி நிலைத்தன்மை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதில், கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற வங்கி மோசடிகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-20ஆம் நிதியாண்டில், ரூ.50 கோடிக்கு மேல் 398 வங்கிகளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு மோசடிகளும், ரூ.1000 கோடிக்கு மேல் 21 வங்கிகளில் ரூ.44,951 கோடிக்கு மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் ரூ.71,543 கோடிக்கு மோசடிகள் நடந்துள்ளன என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
வாராக்கடன்களின் நிலவரமே இன்னும் சீராகாத நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே ஒரு லட்சம் கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பது வங்கிகளின் நிர்வாகத் திறனின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும், மேன்மேலும் மோசடிகள் நடைபெறாத வண்ணம் ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!