India
’பா.ஜ.க.,வின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வெளிப்படையாகப் பேச முடியவில்லை’ : முன்னாள் சபாநாயகர் குமுறல் !
கடந்த பா.ஜ.க.,வின் ஆட்சியின்போது மக்களவை சபாநாயகராக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியிலிருந்து சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தற்போது மக்களவையில் போட்டியிட பா.ஜ.க சுமித்ரா மகாஜனுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த பா.ஜ.க ஆட்சியின் மக்களவையில் இவர் சபாநாயகராக இருந்தபோது மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் பா.ஜ.க மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல், மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதத்தில், சுமித்ரா மகாஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது பேசிய சுமித்ரா மகாஜன், “கடந்த காலத்தில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்தபோது, மாநில வளர்ச்சிக்கு பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
மேலும் மாநில வளர்ச்சிக்குத் தடைக்குறித்த காரணத்தையும் என்னால் அப்போது வெளிப்படையாகச் சொல்ல முடிவில்லை. பின்னர், வளர்ச்சிக்குத் தடையாக இருந்த காரணிகள் குறித்து கேள்வி எழுப்பும்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களிடத்தில் தெரிவித்தேன். அப்போது நான் முழுக்க முழுக்க கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தேன். அதனால், அவர்கள் என்னைப் பேசவிடவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி பா.ஜ.க.,வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !