India
மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நாக்பூர் போலிஸார் சம்மன்!
மஹாராஷ்டிராவில் நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு நாக்பூர் போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஸ் யுகே என்பவர் நீதிமன்றத்தில் மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டு பட்னாவிஸுக்கு எதிராக மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், இந்த வழக்கில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இரு வழக்குகள் குறித்தும் பட்னாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பட்னாவிஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேவேந்திர பட்னாவிஸ் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பட்னாவிஸ் மீதான விசாரணையைத் தொடரத் தடையில்லை எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 4ம் தேதி பட்னாவிஸுக்கு நோட்டிஸ் அனுப்பியது. அதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்ற விவரங்களைப் பிரமாணப் பத்திரத்தில் மறைத்தது தண்டனைக்குரியக் குற்றம். அதுகுறித்த விளக்கம் தாருங்கள்'' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக நாக்பூர் போலிஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, நாக்பூர் போலிஸார் பட்னாவிஸுக்கு சம்மன் அனுப்பினர். முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் ராஜினாமா செய்த 2 நாட்களிலேயே, அவருக்கு போலிஸார் சம்மன் அனுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!