India

மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை., இறக்குமதியுமில்லை: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை!

பா.ஜ.க ஆட்சியில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் பல துறைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 1.11 சதவீதம் குறைந்து, 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிவை சந்திந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேப்போல் இறக்குமதி 16.31 சதவீதம் குறைந்து 2.68 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகவும், இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 79 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில், ஏற்றுமதியைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதமாக சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 30 முக்கியமான பொருட்களில், 8 பொருட்கள் தவிர மற்ற அனைத்தின் ஏற்றுமதியும் கடுமையாக சரிந்துள்ளது.

குறிப்பாக பெட்ரோலியம் பொருட்கள், தோல், ரெடிமேட் ஆடைகள், இன்ஜினியரிங் பொருட்கள், வேளாண் பொருட்கள் போன்றவை சரிவைச் சந்தித்துள்ளது.

இறக்குமதியை எடுத்துக்கொண்டால், நிலக்கரி, பெட்ரோலியம், ரசாயனம், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், எலக்ட்ரானிக் பொருட்கள் என சரிவைச் சந்தித்துள்ளன. இதில் அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி மட்டும் 5 சதவீதம் உயர்ந்து 1.84 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 சதவீதத்திற்கு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read: 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சரிவு : இந்திய வர்த்தகம் குலையும் அபாயம்

இவ்வாறு இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில் ஏற்றுமதி துறையில் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ஏற்றுமதி குறைவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதில், ஏற்றுமதி சரிவுக்கு உலக அளவிலான போக்குகள் ஒரு காரணம் என்றாலும், அதனை சரிசெய்ய மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே வேதனைக்குறிய விசயம். எனவே இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையைச் சீரமைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.