India
லாபத்தில் 99% வீழ்ச்சி - மோடியாலும் காப்பாற்ற முடியாத நிலையில் அதானி பவர் நிறுவனம்
மோடி ஆட்சியில் நிலவி வரும் பொருளாதார சரிவால் முன்னணி தொழில் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன. அந்தவகையில் அதானியின் நிறுவனம் கடும் நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிலையமான அதானியின் பவர் நிறுவனம், பொருளாதார நெருக்கடியால் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் மொத்த வருவாய் 5 ஆயிரத்து 915.69 கோடியாக குறைந்துள்ளது. இதே கடந்தாண்டு 7 ஆயிரத்து 104.22 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த நிறுவனத்தின் லாப மதிப்பிட்டை ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் 33.25 கோடி நிகர லாபம் அடையும் என மதிப்பிட்டிருந்தது. அதில் தற்போது 99 சதவீதம் அளவுக்கு சரிந்து நிகர லாபத்தின் மதிப்பு 3.88 கோடியாகவும், ஆண்டு வருவாயில் வருவாயில் 17 சதவீதம் குறைந்து 5 ஆயிரத்து 916 கோடியாகவும் உள்ளது.
அதேபோல், பவர் நிறுவனத்தின் ஓர் ஆலையில் உற்பத்தி மட்டும் 65 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகக் குறைந்துவிட்டது, அதேபோல் கடந்தாண்டு முன்பு இருந்த 14.6 பில்லியன் யூனிட் உற்பத்திகளிலிருந்து 13.6 பில்லியன் யூனிட்டுகளாக குறைந்துள்ளது.
அதானியின் மற்ற பலத்துறைகளில் ஓரளவு லாபத்தை அடைந்திருந்தாலும் இந்த மின் உற்பத்தி நிலையம் மட்டும் கடும் சரிவை சந்தித்திருப்பது அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பங்கு சந்தைகளிலும் அதானியின் பங்குகள் சரிந்துவருகின்றன.
எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறதோ, பொருளாதார சரிவு அந்த நிறுவனத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!