India
“தொழில் துறை உற்பத்தி 4.3% வீழ்ச்சி” - பொருளாதாரம் கவலைக்கிடமாக இருப்பதை ஒப்புக்கொண்ட மோடி அரசு !
இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சி முன்பு இருந்ததைவிட பலமடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழில் துறையின் இத்தகைய வீழ்ச்சிக்கு மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் சிறு தொழில் உற்பத்தி முற்றிலுமாக செயலிழந்துப்போனது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளன.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (MOSPI - Ministry of statistics and programme implementation) வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியத் தொழில் துறை உற்பத்தி 4.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியா சந்தித்த 1.1 சதவீத வீழ்ச்சியை விட மிக அதிகமாகும்” என தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா வாங்கியிருக்கும் பெரிய அடியாகும். முன்னதாக கடந்த ஜூலை வளர்ச்சி மாதம் 4.5 சதவித என்ற நிலையில் இருந்தது. இதே கடந்த 2018-ம் ஆண்டு செம்ப்டம்பரில் 4.8 சதவிதம் வளர்ச்சி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, தற்போது இந்திய தொழில் வளர்ச்சியில் மிகுந்த லாபத்த எடுத்துக்கொடுத்த நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் ஆகிய இந்தியாவின் எட்டு முன்னணி துறைகளின் உற்பத்தி 5.2 சதவிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 24.8 சதவித வீழ்ச்சியை மோட்டார் வாகனங்கள், டிரைலர், செமி டிரைலர் வாகனங்களின் உற்பத்தியே சந்தித்துள்ளது. அதற்கு அடுத்து 23.6 சதவித வீழ்ச்சியில் ஃபர்னிச்சர் உற்பத்தியும், 22 சதவித வீழ்ச்சியில் உலோகப் பொருள் உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளன. இது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வீழ்ச்சி என்றும், அதன் வீழ்ச்சு மதிப்பு 1.3 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடன் மதிப்பீட்டு தரநிலையில் எதிர்மறையான நிலைக்கு இந்தியா சென்றுள்ளதாகவும் இதனால் முதலீடுகள் குறையும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!