India

சரத்பவாரின் கோரிக்கை ஏற்ற உத்தவ் தாக்கரே : காங்கிரஸ் - தே.காங் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறதா சிவசேனா?

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க - சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தன.

இருப்பினும் இரு கட்சிகளிடையே 50:50 என்ற அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டுபிடித்து வருவதாகவும் தெரிகிறது. இதனால் உத்தவ் தாக்கரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். பின்னர், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் நேற்று மாலை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிக்கு பின் செய்தியாளரை சந்திந்த பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த், போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கப் போவதில்லை எனக் கூறிய, மற்றக் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தால் அதற்கு வாழ்த்துகளையும் கூறினார்.

இதனையடுத்து அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் சிவசோனாவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமது கட்சிக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும் இன்றிரவு 7.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்தால் மட்டும் போதாது, மத்தியில் உள்ள அமைச்சரவையில் இருந்து வெளியெறவேண்டும் என அப்படி வெளியேறுவதாக அறிவித்தால் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுப்போம் என சரத்பவார் கட்சியின் தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இன்று காலை அரவிந்த் சவந்த் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கோரிக்கை ஏற்று சிவசேனா மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் - தே.காங் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.