India
“சிசிடிவியா? செட்டாப் பாக்ஸா?” - 26 லட்சம் கொள்ளையடித்து அறியாமையால் மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்!
26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அறியாமையால் மாட்டிக்கொண்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை வாடிக்கையாளர்கள் போல நுழைந்த கொள்ளையர்கள் சிலர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாட்டிக்கொள்வோம் எனக் கருதிய திருடர்கள், சிசிடிவி யூனிட் என நினைத்து டிவியுடன் பொருத்தியிருந்த செட்-டாப் பாக்ஸை கழற்றி எடுத்துச் சென்றனர்.
பின்னர், இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் நகைக்கடை உரிமையாளர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் நான்கு திருடர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.
சிசிடிவி டிவிஆர் பாக்ஸுக்கு பதிலாக டிவி செட்-டாப் பாக்ஸை எடுத்துச் சென்றதால் கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டில் ஈடுபடுவோர் இப்படி அறியாமையால் மாட்டிக்கொள்வது இது முதல்முறையல்ல. முன்பொருமுறை ஏ.டி.எம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் அச்சடிக்கும் இயந்திரத்தை திருடர்கள் தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!