India
பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா., முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரூ. 9 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி, ஜி.டி.பி மதிப்பு, ஜி.எஸ்.டி வருவாய், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என அனைத்தும் சரிந்து விட்டது. மேலும் சிறு - குறு, நடுத்தரத் தொழில்கள் நசிந்து விட்டன. வேலையின்மை, வறுமை பெருகிவிட்டது.
இவ்வாறு ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெருமுதலாளிகளின் சொத்து மதிப்புக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு உச்சம் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்களில், 9 லட்சம்கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதில், ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் மட்டும், கடந்த 3 மாதங்களில் 990 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரீடெய்ல் தொழிலில் லாபம் 2,322 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. 2019 - 20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 11,262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முன்னதாக வெளியான தகவலில், இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி ரூ 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து 8வது முறையாக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஐந்து ரூபாய் பிஸ்கட் கூட வாங்க இந்திய மக்கள் யோசிப்பதாக பிரிட்டானியா நிறுவன இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது என கேள்வி எழுந்துள்ளது பல பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!