India
ஆட்டோ மொபைல் துறையில் 20 ஆண்டுகளில் கண்டிராத வீழ்ச்சி: அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்!
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந்தித்து வருவதாக தினந்தோறும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஏற்றார் போல நிறுவனங்களும் தத்தம் உற்பத்தியை குறைத்து கொண்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில், 2019ம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வாகன விற்பனை 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் பயணிகள் வாகன விற்பனையானது 25 சதவிகிதமும், வணிக வாகன விற்பனை 20 சதவிகிமும், இரு சக்கர வாகன விற்பனை 15 சதவிகிதமாகவும் குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை டாடா மோட்டார்ஸ் விற்பனை 34 சதவிகிதமும், அசோக் லோண்ட் 29 சதவிகிதமும், மாருதி சுசூக்கி 24 சதவிகிதமும், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் 17 சதவிகிதமும் விற்பனையில் வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
பொருளாதார மந்தநிலை, ஆட்டோ மொபைல் துறையில் மத்திய அரசு அறிவித்த பதிவுக்கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டது இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று துறைச் சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!