India
அசோக் லேலாண்ட், மாருதி வரிசையில் உற்பத்தி நிறுத்ததை அறிவித்தது போஷ் இந்தியா!
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
விற்பனை சரிவு, உற்பத்தி தேக்கத்தால் அசோக் லேலாண்ட், மஹிந்திரா, மாருதி போன்ற பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலையாட்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன.
இது போன்ற உற்பத்தி நிறுத்த அறிவிப்புகள் வாகனங்களுக்கு உதிரி பாகத்தை தயாரிக்கும் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
அந்த வரிசையில், பிரபல வாகன உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனமான போஷ் இந்தியா அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 நாட்கள் வீதம் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள போஷ் இந்தியா ஆலைகள் 30 நாட்களுக்கு மூடப்பட இருக்கின்றன. இந்த உற்பத்தி நிறுத்த அறிவிப்பு போஷ் இந்தியா நிறுவனத்தைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!