India

“வட மாநிலங்களில் 25 ஆண்டுகளில் இல்லாத கனமழை” : 130 பேர் பலி; 4,000 பேர் வீடுகளின்றித் தவிப்பு !

பீகாரில் பெய்து வரும் கனமழையால் பாட்னா, பகல்பூர், கைமுர் போன்ற முக்கிய மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பல குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் வெளியில்வரமுடியாமல் தவித்துவரும் மக்களுக்கு படகுகள் மூலம் உணவு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதேப்போல உத்திர பிரதேச பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் கிழக்கு உத்தர பிரதேசத்தில் மட்டும் 93 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாநிலத்தின் பல்லையா, ஜான்பூர், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்லையா மாவட்ட சிறையில் தண்ணீர் புகுந்தால் அங்கிருந்த 900 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ள பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக அம்மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத்திலும் கனமழை பெய்துவருகிறது. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அங்கு தங்க வைப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை பெய்ததாகவும் இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொழிந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.