India
அடுத்து வருகிறது ‘ஒரே நாடு ஒரே சுங்க கட்டணம்’ : மத்திய அரசு திட்டம்!
வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள், லாரிகளுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் தனித்தனியாக சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனை மாற்றி ஒருமுறை கட்டணம் செலுத்தினால் நாடு முழுதும் பயணிக்கும் வகையில் டோல் கட்டணத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடைபெற உள்ளது.
ஃபாஸ்ட் டேக் (FASTag) என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்த திட்டத்தால் வாடகை கார்கள், ஆம்னி சுற்றுலா பேருந்துகள், லாரிகள் இயக்குவோர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வரைவு கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் எதனையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
Also Read
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!