India
“டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் இதைச் செய்யுங்கள்” - பா.ஜ.க முதல்வரின் பேச்சால் சர்ச்சை!
டெங்கு காய்ச்சலால் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டின் டேராடூனில் மட்டும் 3,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மாநிலத்தில் டெங்குவால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெராடூனில் டெங்கு காய்ச்சல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், “டெங்கு தொற்று உத்திரகாண்ட் மாநிலத்தில் அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரும் பயப்பட வேண்டாம்.
வழக்கமாக காய்ச்சலுக்கு உட்கொள்ளும் 500 மி.கி பாராசிட்டமால் மாத்திரைக்குப் பதிலாக 650 மி.கி பாராசிட்டமால் மாத்திரையை உட்கொண்டு, சிறிது ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும்” எனக் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், அம்மாநில முதல்வரே வெகு அலட்சியமாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிவேந்திர சிங் ராவத் சமீபத்தில், “பசு மாடுகள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. பசு மாடுகளைத் தடவி மசாஜ் செய்தால் சுவாச கோளாறுகள் சரியாகும். பசு மாட்டோடு நெருங்கி வாழ்ந்தால் காசநோய் கூட குணமாகி விடும்” என எகிடுதகிடாகப் பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!