India
"சரிவை தடுக்க ஜி.எஸ்.டி-யை குறையுங்கள்"- மத்திய அரசுக்கு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வலியுறுத்தல்
மோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கைகளான ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் தற்போது நாட்டின் பொருளாதாரமும், வளர்ச்சியும் சரிந்து வருகிறது.
மேலும், மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஆட்டோ மொபைல் துறை முற்றிலும் முடங்கிய அபாயத்துக்கு சென்றுள்ளது.
அதற்கு உதாரணமாக முன்னணி கார் நிறுவனங்களான மஹிந்திரா, மாருதி, டிவிஎஸ் மற்றும் அசோக் லேலாண்ட் போன்றவை தன்னுடைய உற்பத்தியை குறைத்துக்கொண்டு, தொழிற்சாலைகளுக்கும் விடுப்பு அறிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் தற்போது பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், புதிதாக வாகனங்களை வாங்கவும் மக்களால் முன்வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மோடியின் அமைச்சரவை சகாக்களும் பொருளாதாரத்தில் எந்த மந்த நிலையும் ஏற்படவில்லை என பாசாங்கு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல மோட்டார் பைக் உற்பத்தி நிறுவனமான ஹீரோவின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வருவாய் பற்றாக்குறையால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விற்பனையை அதிகரிப்பதன் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைக்கலாம். இதனை ஒவ்வொரு கட்டமாக அணுகி நிச்சயம் பிரச்னையை தீர்க்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்துக்குள் கொண்டு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகரிக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக கார்களின் மீதான வரியை குறைக்க பரிசீலிக்க வேண்டும்” என நிரஞ்சன் குப்தா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!