India
கார் உற்பத்தி நிறுத்தத்தை நீட்டித்த மஹிந்திரா : வேலையில்லாமல் திண்டாடும் ஊழியர்கள்!
இந்திய பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோ மொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால், நாட்டின் முன்னணி நிறுவனங்களான மாருதி, அசோக் லேலாண்ட், டிவிஎஸ் போன்றவை ஜிஎஸ்டி உயர்வு, பிஎஸ்6 எமிஷன் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அதுபோல, மஹிந்திரா நிறுவனத்திலும் ஜூலை முதல் செப்டம்பர் வரை 8 முதல் 14 நாட்கள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது உற்பத்தி நிறுத்தத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து 17 நாட்களாக அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
வாகனங்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதாலும் புதிய வாகன தயாரிப்புக்கான தேவை இல்லை என்பதாலும் உற்பத்தி நிறுத்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!