India
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்புக்கு வந்த கார் மோதி 6 வயது சிறுவன் பலி!
ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தின் திஜாராவில் உள்ள துறவியை சந்திக்க நேற்று அங்கு சென்றுள்ளார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்.
திஜாராவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆல்வார் மாவட்டத்துக்கு மோகன் பகவத் திரும்பியுள்ளார். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், மோகன் பகவத்தின் காருக்கு முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றன.
அந்த சமயத்தில், பெஹ்ரோர் பகுதி வழியாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் சிறுவன் மீது மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோதியுள்ளது.
கார் மோதியதில், இருசக்க வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த 6 வயது சிறுவன் தூக்கி விசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். முதியவரும் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மாண்டவார் போலிஸார், மோகன் பகவத்தின் பாதுகாப்பு காரை பறிமுதல் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!