India
ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் அபாயம்!
இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 65 காசுகளாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
புதன்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 55 காசுகளாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று திடீரென 26 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 81 காசுகளாகவும், வார வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று காலை மேலும் 22 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 3 காசுகளாகவும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாகும். எனினும் பிற்பகலில் சற்று முன்னேற்றம் அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, 2.35 மணியளவில் 71 ரூபாய் 59 காசுகளாக உயர்ந்தது. எனினும் வர்த்தகநேரம் முடிவில், 71 ரூபாய் 77 காசுகளாக மீண்டும் இறக்கத்தைச் சந்தித்தது.
2019ம் ஆண்டின் வீழ்ச்சி சதவீதம் 3.10 சதவீதம் ஆகும். அதேபோல் ஆகஸ்ட் மாதங்களை எடுத்துக்கொண்டால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு 4.60 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் சீன நாட்டின் யுவான் மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அதனால் இந்திய பங்கு சந்தையும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் 971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மறுபுறத்தில் அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய ‘யென்’னில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவிகிறார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!