India
“சொந்த வீட்டிலேயே சிறை வைத்தார்கள்... தாங்குவீர்களா?” : காஷ்மீர் மக்களின் வலியை விளக்கும் யெச்சூரி !
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாகவும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக காஷ்மீரில் ஏராளமான ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு, காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
இதையடுத்து காஷ்மீரில் 144 அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். மக்கள் எவரிடமும் தொடர்புகொள்ள முடியாதபடிக்கு தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று காஷ்மீர் நிலவரத்தைப் பார்வையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகரிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் அமல்படுத்தவேண்டும் எனவும், கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி 144 தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில், "ஈத் பண்டிகை ஒரு கொண்டாட்டம் நிறைந்த தருணமாகும். ஆனால், இந்நேரத்திலும் காஷ்மீரில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய தகவல் இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை.'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!