India
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக பார்வையிட்டார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி!
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரள மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கேரளாவில் மழை பாதிப்பால் 62 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கனமழையால் கோழிக்கோடு, மலப்புரம், ஆழப்புழா, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பியான ராகுல் காந்தி, கேரளாவுக்கு சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
நிலம்பூர், வண்டூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது மட்டுமல்லாமல், மழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், நிலம்பூர், எடவனப்பாரா ஆகிய பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து பேசினார்.
மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு தீவிரபடுத்தவேண்டும் எனவும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என அரசிடம் ராகுல்காந்தி வலியுறுத்தியதாக ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !