India
வாரிச் சுருட்டிய நிலச்சரிவு - கேரள மழை வெள்ளத்தில் கிராமமே அழிந்து போன சோகம்!
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நதிகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை வெள்ளத்தால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் 4 நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள புதுமலை பகுதியில் தான் அதிக முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஹாரிசன்ஸ் என்ற தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பணிபுரியும் மக்கள் உட்பட மொத்தம் 60 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தனர்.
கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் புதுமலை கிராமமே மொத்தமாகச் சரிந்தது. நிலச்சரிவால் அங்கிருந்த வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போனது. ஒரு கிராமம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த 63 வீடுகளில், இப்போது எட்டு வீடுகள் மட்டுமே உள்ளன. இதுவரை 18 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவிலிருந்து தப்பிய கிராமவாசி ஒருவர் "புதுமலை கிராமம் இப்போது இல்லை" என்று பேரதிர்ச்சியுடன் கூறுகிறார். மேலும் 15-20 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என்று கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!