India
“காஷ்மீர் மக்கள் எப்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்?” : சசி தரூர் உருக்கமான பேச்சு!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதா இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அமித்ஷா தாக்கல் செய்த காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசினார். அவர் பேசியதாவது, “அடக்கி ஒடுக்கும் பெரும்பான்மையை நீங்கள் வைத்திருப்பதால் இந்த மசோதா நிறைவேறுகிறது. ஆனால் கலந்தாலோசிப்பது என்கிற நடைமுறையைத் துச்சமெனத் தூக்கி எறிந்திருக்கிறீர்கள்.
பணமதிப்பு நீக்கத்துக்கு சமமான ஒன்றை இப்போது பா.ஜ.க அரசு நிகழ்த்தியிருக்கிறது. அரசின் இந்த முடிவே தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களைத் திருப்ப காரணமாகப் போகிறது. இராணுவ வீரர்களுக்கு இனிதான் நிஜமான ஆபத்து.
பிரிவினைக்குப் பிறகும் முஸ்லிம் பெரும்பான்மை பெற்ற மாநிலமொன்று நம்மிடையே இருந்தது என்ற பெருமையை தற்போது இழந்திருக்கிறோம். இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்தின் - ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
காஷ்மீர் மக்கள் தங்கள் குழந்தைகளை எப்போது பள்ளிக்கு மீண்டும் அழைத்துச் செல்லப் போகிறார்கள். அவர்கள் எப்பொது தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்? முடிவுகள் காஷ்மீர் மக்களின் இதயங்களில் எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் அல்ல.
எனவே, காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலையை நேரில் சென்று ஆராய அனைத்துக் கட்சி குழுவுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.” என உருக்கமாகப் பேசினார் சசி தரூர்.
Also Read
- 
	    
	      "டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
- 
	    
	      ”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
- 
	    
	      SIR நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் : நடைமுறை சிக்கல்களை விளக்கி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக!
- 
	    
	      குடும்ப அரசியலைப் பற்றி பேச பா.ஜ.கவுக்கு தகுதியே இல்லை : வெளுத்து வாங்கிய முரசொலி!
- 
	    
	      SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!