India
தவறான பொருளாதாரக் கொள்கைகள் - உலகப் பொருளாதார பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா
உலக வங்கி ஆண்டுதோறும் உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், 2018ம் ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017ம் ஆண்டில் 5ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது வந்துள்ள பட்டியலில் 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 7ம் இடத்தில் உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) அடிப்படையிலே உலக வங்கி இப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி வரிசையாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு இந்தியாவின் ஜி.டி.பி அதிகமாக இருந்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் சரிவும், மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் தான், இந்தியா பின்தங்க காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“பெரியார் அறிவுலகம் என் கடமை...” - CM விஜய்யின் சோப்ளாங்கி ஆட்சியை வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!
-
சில்லறைக்காக தகராறு.. ஓடும் பேருந்தில் பெண் நடத்துநரை உதைத்த பெண்.. 9 நாட்களுக்கு பிறகு நேர்ந்த சோகம்!
-
அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?
-
நிர்வாக சீர்கேடு.. மலிவு விலை வெங்காயம் கொள்முதலில் அலட்சியம்... த.வெ.க அரசின் அரசியல் நாடகம் அம்பலம்!
-
“வெங்காயம் வாங்கத் தெரியாதா? டம்மி முதலமைச்சரே...” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!