India
பசுக்களுக்கு ‘மசாஜ்’ செய்தால் சுவாச பிரச்னை வராது : பா.ஜ.க முதல்வரின் வியக்க வைக்கும் அறிவியல் அறிவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக திரிவேந்தர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் டேராடூனில் நேற்று விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், விலங்குகளில் பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதை வெளியேற்றவும் செய்வதாகத் தெரிவித்தார். மேலும், பசுக்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் மனிதர்களின் சுவாச பிரச்னைகளிலிருந்து விடுபட முடிவதாகவும், அதேசமயம் பசுவுடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் பேச்சு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் அலுவலகம் “பசுக்கள் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக மக்கள் நம்புகிறார்கள். எனவே மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதல்வர் அவ்வாறு பேசியிருந்தார்” என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!