India
பிரியங்காவுக்கு நெல்சன் மண்டேலா சொன்ன விஷயம்!
கறுப்பின மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலாவின் 101-வது பிறந்த தினம் இன்று. நிறவெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலாதான் தென் ஆப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.
இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினத்தன்று அவரை நினைவுகூர்ந்து, அவரை மிஸ் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :
“எனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் உள்ள தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, வேறுயாரும் சொல்வதற்கு முன்பே, நான் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உலகம் மண்டேலா போன்றவர்களை முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இழந்துவிட்டதாக உணர்கிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்ந்தது.” எனத் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!