India
149 வருடங்களுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்... இன்று இரவு பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க !
மிகவும் அபூர்வமாக நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் இன்று நள்ளிரவு துவங்கி நாளை அதிகாலை (ஜூலை 17) வரை நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் நிகழ்வானது பகுதி நேர சந்திர கிரகணம் மட்டுமே. முழுமையான சந்திர கிரகணம் அடுத்து 2021ம் ஆண்டு நிகழும்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது தான் சூரிய, சந்திர கிரகணங்கள் உருவாகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
149 ஆண்டுகளுக்குப் பின் இன்றிரவுதான் இந்த அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்கிறது. சில நாடுகளில் இன்று இரவு இந்த கிரகணம் ஏற்படும். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.31 மணிக்கு உச்சம் பெறும். அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவுபெறும்.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த சந்திர கிரகணத்தைக் கண்டு களிக்கலாம். பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாகவும் இதைப் பார்க்கலாம். இதற்குப் பின் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும்.
Also Read
-
“SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்கிட வேண்டும்!” : வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!
-
ரூ.38 கோடி : சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
38 கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்த முதலமைச்சர்! : நன்றி தெரிவித்த உழவர்கள்!
-
குழந்தைகளின் நலனை பேணிக்காத்த நிறுவனங்கள் : விருதுகள் வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இந்து சமய அறநிலையத் துறைக்கான புதிய திட்டப்பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!