India
புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
மே மாதம் 31ம் தேதி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
வரைவின் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் கோரினார். இதையடுத்து, பொதுமக்கள் கருத்துக்கூற வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார்.
Also Read
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!