India
குஜராத் கலவர உண்மையை வெளிகொண்டு வந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: பழி வாங்கும் மோடி?
குஜராத் ஜாம்நகரில் 1990ல் இந்துத்துவா கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அந்த வன்முறை நிகழ்ந்த ஆண்டில் ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக சஞ்சீவ் பட் பதவியில் இருந்தார்.
அந்த கலவரத்தின்போது, கலவரத்தில் ஈடுபட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணவி என்பவர் மருத்துமனையில் உயிரிழந்தார். பிரபுதாஸ் மாதவ்ஜி மரணத்திற்கு சஞ்சீவ் பட் மற்றும் பிற அதிகாரிகளே காரணம் என பிரபுதாஸ் மாதவ்ஜின் சகோதரர் வழக்கு தொடுத்திருந்தார்.
இதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்தரவு வழங்கியதாக சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். இதனையடுத்து அவதூறு தெரிவித்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
உயர் பதவியில் இருந்த சஞ்சீவ் பட், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும் படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் அடிப்படையில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இது உண்மையல்ல என குஜராத் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் மறுத்துள்ளார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சி அளித்தற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த முப்பது வருட ஆண்டு கால வழக்கில் குற்றவாளி என தற்பொழுது ஜாம்நகர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் கூடுதலாக 11 பேரை சாட்சியங்களை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிய சஞ்சீவ் பட்டின் மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் நிராகரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்த சஞ்சீவ் பட், இந்த வழக்கில் நியாயமான ஒரு முடிவுக்கு வர இந்த 11 சாட்சியங்களின் விசாரணை மிக முக்கியம் என தெரிவித்திருந்தார். மேலும் 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் முதல்வராக இருந்த மோடியையும் விசாரிக்க வேண்டும் என சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபா'வா - முரசொலி தாக்கு!
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?