India
“ஸ்டாலின் வாழ்க” என முழக்கமிடும் கம்யூனிஸ்ட்டுகள் : மலையாள நாளிதழின் கேலிச்சித்திரம்
நாடு முழுவதும் நடந்த 17வது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பா.ஜ.க 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தனை தொகுதிகளைப் பெற்றதன் மூலம், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது பா.ஜ.க.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே பல மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்தது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் செல்வாக்கு பெற்ற மாநிலங்களான கேரளா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது கம்யூனிஸ்ட் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
50க்கும் மேற்பட்ட இடங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருந்த இடதுசாரிக் கட்சிகள் தற்போது மொத்தம் 5 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் 4 இடங்களைப் பெற்றுள்ளது.
அதேபோல, கேரளாவில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரிகளின் இந்தத் தோல்வி நாடு முழுவதும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையாள நாளிதழான மலையாள மனோரமா கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலின் படத்தை அகற்றிவிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை சீதாராம் யெச்சூரி மாட்டுவது போலவும், “ஸ்டாலின் வாழ்க” என பிரகாஷ் காரத் முழக்கமிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!