India
ஆந்திர சட்டசபைத் தேர்தல் : ஜகன்மோகனிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறாரா சந்திரபாபு நாயுடு ?
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 88 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 30 தொகுதிகளிலும் , பா.ஜ.க 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் எஸ்.டி.எப் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!