India
ரயில் டிக்கெட் கேன்சல் செய்பவர்களால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் லாபம்.. எப்படி தெரியுமா ?
2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் ரயில்வே துறை அடைந்த லாபம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது மத்திய அரசு. ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5,366.53 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில், கடந்த 2017-2018 நிதியாண்டில், ரயில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,205.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2018-2019 நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.646.54 கோடி அதிகமாகும்.
அதே போல், தெற்கு ரயில்வே துறையில், கடந்த 2017-18ல் 176.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-19ல், 182.56 கோடியாக உயர்ந்துள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!