India
வாக்குகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்ட முடியாது! உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் வருகிற மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.இதற்கு முன்னதாக நடந்த தேர்தலைப் போல் இல்லாமல் இந்தாண்டு முதல் புதிதாக விவிபேட் (VVPAT) இந்திரங்கள் பயன்படுத்தபட்டு ஒப்புகைச்சீட்டாக பதிவாகும் வகையில் அமைக்கப்படுள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பில்லை, அது தொல்லையாக முடியும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் எதிர்க்கட்சியினர் 50% ஒப்புகை சீட்டை எண்ணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் அதிகாரியை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!