India
டெல்லியில் நாளை மறுநாள் தேர்தல் ஆணையர்கள் அவசரக் கூட்டம்!
மக்களவைத் தேர்தலின் 7ம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, வருகிற மே 21ம் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையர்களின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அதாவது, முழு கமிஷன் என்று சொல்லக்கூடிய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை மற்றும் 2வது, 3வது ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மோடி, அமித்ஷா மீதான புகார் குறித்த தனது எதிர்ப்பு கருத்துகளை பதிவிடாத தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக அசோக் லவாசா போர்க்கொடி உயர்த்தியிருந்தார். இதனையொட்டி, தேர்தல் ஆணையர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மே 23ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்த சில முக்கிய முடிவுகளும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக, விவிபேடில் உள்ள வாக்குகளையும் எண்ணுவதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
கழக இளைஞரணி சார்பில் “தி.மு.க 75 - அறிவுத்திருவிழா!” : எங்கு? எப்போது?
-
தமிழ்நாடு முழுவதிலும் ’தியாகச் சுவர்கள்’ எழுப்பப்படும்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
-
“‘அரசைத் திருடும் ஆபரேஷன்’ - அசிங்கப்பட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்”: முரசொலி தலையங்கத்தில் கடும் தாக்கு!
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!