India
இந்திய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்:உளவுத்துறை எச்சரிக்கை!
கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், அங்கு மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!