India

எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை : உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி, ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் விடுதலைக்கு எதிராக குண்டுவெடிப்பில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. எழுவரை விடுதலை செய்வது ஏற்புடையதல்ல என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், 7 பேரின் விடுதலை விவகாரம் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மனு தொடர்பாக முடிவெடுக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்ற காரணத்தை முன்வைத்து இந்த விவகாரத்தில் எந்த தயக்கமும் காட்டவேண்டியது இல்லை என தெரிவித்தனர்.