India
2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் கவுதம் கம்பீர் : நீதிமன்றத்தில் புகார்!
பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக கண்டறிந்த ஆம் ஆத்மி வேட்பாளர், நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் இணைந்ததுமே பா.ஜ.க சார்பில் தில்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் வேட்பு மனுதாக்கல் செய்தபோது பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக அவருக்கு எதிராக அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் தில்லியில் ராஜேந்திர நகர், கரோல் பாக் என இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்து வைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளது என்றும் அவரை வேட்பாளராக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!