India
நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீட்டித்தது லண்டன் நீதிமன்றம்!
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி தனது உறவினரான மெகுல் சோக்சியுடன் கூட்டுச் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனை வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற நிரவ் மோடி அங்கு தலைமறைவாக இருந்துள்ளார். சமீபத்தில் மாறுவேடத்தில் நிரவ் மோடி அந்நாட்டின் முக்கிய நகரத்தில் உலா வந்ததை அறிந்ததும், அவரை நாடுகடத்த வேண்டும் என லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
மனுவை ஏற்று லண்டனில் உள்ள நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்க வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஆணையிட்டது. இந்நிலையில் நிரவ் மோடியின் காவல் முடியவுள்ள நிலையில், அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிரவ் மோடி தொடர்ந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு மூன்று முறை நிரவ் மோடியின் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிரவ் மோடிக்கு மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மறு விசாரணை மே 24 அன்று நடைபெறும் என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!